

யாருமே தனது நாட்டைவிட்டு அகதிகளாக இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம் போன்ற எந்த நாட்டுக்குப் போனாலும், அங்கே அவர்களுக்கு நிம்மதியான வாழ்வு அமைவது சிரமமே. அதே சமயம் இலங்கையில் இருந்து வந்த தமிழ் இனத்து அகதிகள் தமிழகத்தில் நிம்மதியாக வாழவில்லை என்பது ‘தத்தளிக்கும் படகு மக்கள்’ கட்டுரையின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி, ஈழத்து அகதிகளிடம் எப்படியாவது ஆஸ்திரேலியா சென்றுவிட வேண்டும், தங்கள் பிள்ளைகளுக்காவது நிம்மதியாக வாழும் சூழலை அமைத்துத்தர வேண்டும் என்ற மன நிலை காணப்படுவது உண்மை. இந்திய ஆட்சியாளர்கள் ஈழத் தமிழ் அகதிகளுக்கு இங்கேயே நிம்மதியாய் வாழும் சூழ்நிலையை உருவாக்கித் தருவது மனிதாபிமான செயலாக இருக்கும்.
- அஹம்மது, ‘தி இந்து’ இணையதளம் வழியாக…