Published : 20 Apr 2018 09:05 AM
Last Updated : 20 Apr 2018 09:05 AM

இப்படிக்கு இவர்கள்: மக்களுக்கான மொழி எங்கே?

செ.கணேசலிங்கன்

சென்னை-26

மக்களுக்கான

மொழி எங்கே?

ன் அப்பா, என் பெயரைப் பதிவு செய்யும்போது ‘கணேசலிங்கம்’ எனப் பதிந்துவிட்டார். அப்பெயர் என் அரசுப் பணிகளுடன் தொடர்ந்தது. நான் 15 வயதில் எழுத்துலகில் புகுந்தபோது என் பெயரை ‘கணேசலிங்கன்’ என ஆண்பால் ‘அன்’ உடன் ‘கணேசலிங்கன்’ என இன்றுவரை தொடர்கிறேன். சில காலம் அச்சகம் நடத்தியபோது திருமண அழைப்புகள் அச்சிட வருவோர் ‘எனது மகன்’, ‘எனது மகள்’ என எழுதி வருவதை ‘என் மகன்’, ‘என் மகள்’ என திருத்தி அச்சிடுவோம். ‘என் + அது’ - ‘அது’ அஃறிணைச் சொல் என விளக்குவதுண்டு. மேலும் ஓர் எழுத்தை அச்சில் தவிர்க்கவும் முடிந்தது. ‘என் சரித்திரம்’ என்றே உ.வே.சாமிநாத ஐயர் எழுதினார். தற்போது வந்த ஆதார் அட்டையில் 4 இடங்களில் ‘எனது’ என்பதைப் பார்த்தேன். அரசு தொழிலை லட்சக்கணக்கானவர் ஏற்கும்போது, நாமும் ஏற்க வேண்டியதாகிறது. முன்னர் ‘அரசி மொழி’ (QUEEN LANGUAGE) எனப் பல கோடிப் பெயர், ஊர், நகர் சொற்களை ஏற்க வேண்டியிருந்தது. இன்று இந்தியா குடியரசு. மக்களின் மொழிக்கு அரசு மாறுமா?

மு. ஜாபர் சாதிக் அலி, சென்னை-14.

மலைக்கிராம மாணவருக்கு

கிடைத்த அங்கீகாரம்

‘அ

றிவியல் உலகில் சிறகை விரிக்கும் சின்னக்கண்ணன்' எனும் கட்டுரை (18.4.18) பழங்குடி இனத்தவர்களுக்கு போக்குவரத்து வசதிகளும், அடிப்படைக் கல்வியும் கிடைக்காமல் இருக்கும் அவலநிலையை எடுத்துக்காட்டுகிறது. மலைக்கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் அரசுப் பள்ளியை மட்டுமே நம்புகின்றனர். ‘மலைக்கிராமங்களில் போக்குவரத்து வசதியின்மையால் ஏற்படும் ஆற்றல் இழப்பு' எனும் கட்டுரை அவர்கள் படும் வேதனைகளின் கண்ணாடியாகவே அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்பட்டுள்ளதாக எண்ணுகின்றேன். சாதனை மாணவனை இனம் கண்டு வெளிக்காட்டிய ஜி. இராமகிருஷ்ணனுக்கும்‘தி இந்து'வுக்கும் பாராட்டுகள்.

க . வீரநாகேஸ்வரன், சென்னை.

கம்யூனிஸ்ட்டுகளின் அவசியம்

ப்ரல் 19-ல் வெளியான ‘கம்யூனிஸ்ட்டுகள் ஏன் மாற மறுக்கிறார் கள்?’ கட்டுரை படித்தேன். லெனினைப் பின்பற்றி அரசில் பங்கேற்காமல் இருப்பது கம்யூனிஸ்ட்டுகளின் கொள்கைப்பிடிப்பாக இருந்தாலும், அதனால் என்ன நன்மை பயக்கப் போகிறது என்பது மிக முக்கியம். கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சிக்கு வருவது அவசியம். ஏழை, நடுத்தர மக்களுக்கான அரசாக அது இருக்க வேண்டும். பெருநிறுவனக் கலாச்சார சூழலில், கம்யூனிஸ்ட்டுகளின் தேவையை உணர்த்துகிறது இக்கட்டுரை.

ஜீவன்.பி.கே. கும்பகோணம்.

நல்லதைச் செய்வதற்கு ஆட்கள் இல்லையே?

ப்ரல் 19-ல் வெளியான ‘சூரிய மின்னுற்பத்தி ஒரு முன்னுதாரண கிராமம்' கட்டுரை, குஜராத் மாநிலத்தில் துண்டி கிராமம் அடைந்த முன்னேற்றத்தைப் பதிவுசெய்திருக்கிறது. சூரியஒளி மின்னுற்பத்தித் திட்டத்தை நிறைவேற்றினால் மின்சார உற்பத்தி, மின்சார விநியோகம், தண்ணீர், எரிபொருள் சிக்கனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்று எவ்வளவோ செயல்கள் நிறைவேறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x