

‘தோழியைப் பலாத்காரம் செய்த கணவன்’ என்ற பெங்களூரு செய்தியைப் படித்ததும் வருத்தம் மேலிட்டது. தரமான செய்திகளையும் பயனுள்ள கட்டுரைகளையும் தந்து, குடும்பத்தில் சிறுவர் முதல் பெரியவர் வரை ஒன்றாக அமர்ந்து படித்து, விவாதிக்கத் தூண்டும் ‘தி இந்து' தமிழ் நாளிதழில் இப்படி ஒரு செய்தியை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
சமூகத்தில் ஏற்பட்டுவரும் ஒழுக்கக்கேடுகளைச் சுட்டிக்காட்டும்போது, அதை இளையோரும் படித்து, நல்ல பாடம் கற்கும் வண்ண மாகவே கையாளும் உங்கள் பாணியில், இதை ஒரு விதிமீறலாகவே பார்க்கிறேன். நமக்கு இது வேண்டாமே!
- என். ராகவன், விருதுநகர்.
குறிப்பிட்ட அந்தச் செய்தியும்கூட, ஒரு மனநோயின் தாக்கம் பற்றிய மருத்துவரீதியான தகவலை அளிக்கும் நோக்குடனேயே இடம்பெற்றது. இருப்பினும், வாசகரின் வருத்தம் புரிகிறது. மேலும், கவனம் காப்போம்.
- ஆசிரியர்