Published : 27 Apr 2018 09:27 AM
Last Updated : 27 Apr 2018 09:27 AM

இப்படிக்கு இவர்கள்: வழிகாட்டும் மக்கள் நீதி மய்யம்

சு.பாலகணேஷ்,

மாதவன்குறிச்சி.

வழிகாட்டும் மக்கள் நீதி மய்யம்

சு

தந்திர இந்தியாவில் இன்றளவும் குடிநீர், போக்கு வரத்து, மின்வசதி இன்றி முற்றிலும் அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்ட கிராமங்கள் பல உள்ளன. கிராமங்கள் இந்தியாவின் முதுகெலும்பு என்ற நிலை மாறி, வாழத் தகுதியற்ற இடம் என்பது போன்ற நிலையை உருவாக்கிய ஆட்சியாளர்கள் வாழும் இந்நாட்டில், மக்கள் நீதி மய்யத்தின் செயல்பாடுகள் மெச்சத் தகுந்தவை. கிராமப் பஞ்சாயத்துகள் ராஜ்ஜியத்தை வலுப்படுத்தி, கிராம மக்களின் பொருளாதார நிலை மேம்பட, மக்கள் விழிப்புணர்வு அடைய இக்கிராம சபைக் கூட்டங்கள் வழி காட்டட்டும். கிராமங்களில் வாழ்வதாலேயே மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை என்ற சூழலுக்கு அரசாங்கம் மட்டும் கரணம் அல்ல; மக்கள் தங்கள் அதிகாரத்தையும் உரிமையையும் அறியாமல் இருப்பதே இத்த கைய பின்தங்கிய நிலைக்குக் காரணம்.

பொன்.குமார், சேலம்.

மலைவாழ் மக்களின் கல்வி?

ல்வி அனைவருக்கும் பொது. கல்வியை எல்லாக் குழந்தைகளுக்கும் கொண்டுசெல்ல வேண்டியது அரசின் கடமை. மலைவாழ் குழந்தைகளுக்கான கல்வியில் அரசு இன்னும் கவனம் செலுத்த வேண்டும். ‘வாய்ப்பு கிடைத்தால் சாதனை படைப்பார்கள் பழங்குடியினக் குழந்தைகள்’ என்று ஆதாரத்துடன் ஜி.ராமகிருஷ்ணன் எழுதியுள்ளது மிகவும் பொருத்தமே. அரசு மலைவாழ் மக்களுக்குக் கல்வி கிடைக்கும் வகையில் எல்லா ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.

ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்.

நம்பிக்கையைச் சிதைத்துவிடாதீர்கள்

நீ

திமன்றங்களின் நம்பகத்தன்மை விவாதப்பொருளாக ஆகியிருக்கும் இக்காலச் சூழலிலும், சிறுமி பலாத்கார வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட செய்தி, நம்மைப் பெருமிதம்கொள்ளத்தான் வைக்கிறது. சில நேரங்களிலாவது கடைக்கோடி மனிதனுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை நீதிமன்றம்தான்.

ரஞ்சனி பாசு, மின்னஞ்சல் வழியாக.

மகத்தான தலைவர் சச்சார்!

ப்ரல் 25 அன்று வெளியான ‘சச்சார்: சமூக நீதியின் நாயகன்’ கட்டுரை படித்தேன். வசதியான குடும்பப் பின்னணியிலிருந்து வந்து, எளிய மக்களின் நலனுக்காகத் தன் வாழ்நாளைச் செலவழித்த மகத்தான தலைவர் சச்சார். தன் கொள்கையால், நேருவுடனான அறிமுகத்தை இழக்கத் தயாராய் இருந்த நேர்மை போற்றத்தக்கது. சச்சார் கமிட்டி வெளியானபோதுதான், அனைவரும் இஸ்லாமியரின் சமூக நிலை குறித்த உண்மையான தகவல்களை அறிந்தோம். கட்டுரையாளர் குறிப்பிட்டபடி, நடைமுறையில் இஸ்லாமியர்கள் தாங்கள் தேச விரோதிகள் அல்ல, பயங்கரவாதிகள் அல்ல என்பதை நிரூபிக்கும் கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை.

வலங்கைமான் நஸீர், சென்னை.

பெரும் தலைகுனிவு

ல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்கிற அழகான வாசகத்தின் பெருமையையும் மாண்பையும் படித்தவர்களே குழிதோண்டிப் புதைத்துவிட்டனர். பதவிக்காகவும் பணத்துக்காகவும் சொகுசு வாழ்க்கைக்காகவும் தவறாகச் செயல்பட்ட பல்கலைக்கழக உயரதிகாரிகளால் ஏற்பட்ட தலைகுனிவு பெரும் அவமானம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x