

இந்தியாவில்தான் உலகிலேயே ஸ்திரமான பெரிய நுகர்வுச் சந்தை உள்ளது. அமெரிக்க, ஐரோப்பிய வியாபார நிறுவனங்கள் இந்தியச் சந்தையைக் கைப்பற்றத் துடிக்கின்றன. அதிலும் மிக வேகமாக வளர்ந்துவரும் உணவு உற்பத்தித் துறைதான் அவர்களின் கண்களை உறுத்தும் மிக முக்கியமான துறை. இந்திய சில்லறை வணிகத்தில், பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த சமயத்தில், இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒரு கூட்டத்தொடர் முழுவதும் முழுமையாக முடக்கப்பட்டன.
இதற்கு மாற்றுவழியாக மத்திய அரசு இந்தப் புதிய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தினைக் கையில் எடுத்தது. 1954-க்குப் பிறகு விவசாய நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் எதையும் பரிசீலனை செய்யாமல், 1954 சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட உணவுப் பொருள்களின் தரத்தையே புதிய சட்டத்திலும் விதித்திருப்பது இந்திய விவசாயத்தையும், இந்திய உணவுப்பொருள் தயாரிப்பு மற்றும் வணிகத்தையும் முற்றிலும் ஒழித்துவிடும். இந்நிலையில், பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு வழங்க வாய்ப்பு ஏற்பட்டு விடும். எனவே, எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
-பி. சுபாஷ் சந்திர போஸ், மின்னஞ்சல் வழியாக...