

இரோம் ஷர்மிளா 14 ஆண்டுகளாகத் தன்னுடைய மாநிலப் பெண்களின் மானத்தைக் காப்பாற்றத் தனி மனுஷியாகப் போராடுகிறார். அவர் வாக்குவங்கிக்காகச் செயல்படும் அரசியல்வாதியல்ல. ஆனால், அவரது நியாயமான கோரிக்கை இன்னும் யார் காதிலும் விழவில்லை.
‘தி இந்து’ போன்ற ஊடகங்களின் மூலம்தான் இந்த விஷயத்தின் தாக்கம் மணிப்பூர் மாநிலத்தைக் கடந்து சாமானியர்களின் மனதை எட்டியிருக்கிறது. தென்னாப் பிரிக்காவின் நெல்சன் மண்டேலா, மியான்மரின் ஆங் சான் சூச்சி போன்றோர் பின்பற்றிய காந்திய வழிமுறையைப் பின்பற்றும் இரோம் ஷர்மிளாவின் கோரிக்கை வெற்றிபெறக் குரல் கொடுப்போம்.
- அ. பட்டவராயன், திருச்செந்தூர்.