வாழ்க்கையைக் கற்றுத்தரும் இலக்கியம்

வாழ்க்கையைக் கற்றுத்தரும் இலக்கியம்
Updated on
1 min read

‘கம்பன் நமது பெருமிதம் இல்லையா?' என்ற கட்டுரை கண்டேன். இன்றைய நவீன இலக்கியம் உட்பட தமிழ் இலக்கியம் எதுவும் பெரும்பாலானோருக்கு உவப்பானதாக இல்லை. இதற்கு அடிப்படை நமது கல்விமுறைதான். புத்தகம் என்றாலே ஒவ்வாமை எனும் சிந்தனை நமது பள்ளிகளிலேயே மாணவர்களிடம் ஏற்படுத்தப்படுகிறது.

பள்ளிக்கல்வியோ, கல்லூரிக் கல்வியோ முடித்த மாணவர்கள் அதன் பிறகு புத்தகத்தை - அது என்ன புத்தகமாக இருந்தாலும் சரி-ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அதுதான் பிறகு வாழ்க்கை முழுவதும் தொடர்கிறது. இளைஞர்கள் தெரிந்துகொள்ள இலக்கியத்தில் எத்தனையோ விஷயங்கள் உள்ளன. அவை, வாழ்க்கை பற்றிய பார்வையை விஸ்தாரமாக்கும் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும்.

- கே.எஸ்.முகமத் ஷூஐப், காயல்பட்டினம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in