

கும்பகோணம் தீ விபத்தில் வழக்கம்போல அதிகாரிகள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளபடி பெற்றோர்களை மட்டுமன்றி நீதிமன்றங்களை நம்பியிருக்கும் சாமானிய மக்களையும் ஏமாற்றியுள்ளது இந்தத் தீர்ப்பு.
10 ஆண்டுகள் கழித்து வந்துள்ள தீர்ப்பு, பெற்றோர்கள் மனதை வேதனைப்படுத்தியிருக்கிறது. சம்பவம் நடைபெற்ற பள்ளியின் உள்கட்டு மானங்களை ஆராயாமல், கடமையைச் செய்யத் தவறிய அதிகாரிகள் விடுவிக் கப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
- இல. ஜெகதீஷ், கிருஷ்ணகிரி.