

தமிழ்த் தேசியர்கள் களத்தில்தான் இருக்கிறோம். ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் ஒரு வார காலத்துக்கு சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடுமாறு மத்திய அரசின் மனிதவளத் துறை அறிவித்துள்ளது.
மிகமிகக் குறைந்த மக்களால் மட்டுமே அறியப்பட்டுள்ள ஒரு மொழிக்கு சிறப்புத் தகுதிகளை வழங்குவதும் அரசின் நிதியிலிருந்து பெருவாரியான பணத்தைக் கொட்டிக்கொடுப்பதும் நியாயமற்றது.
ஜனநாயக எதிர்ப்போக்குடையது. இதைத் தமிழர்கள் யாரும் வேடிக்கை பார்க்கவில்லை. இதைக் கண்டித்து, வெவ்வேறு வகையில் குரல் கொடுக்கிறோம்.
திராவிட இயக்கத் தமிழர் பேரவை மற்றும் தமிழ் இயக்கங்களின் சார்பில், ஆகஸ்ட் 6 அன்று வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.
- சுப. வீரபாண்டியன், பொதுச் செயலாளர்,
திராவிட இயக்கத் தமிழர் பேரவை, சென்னை.