

‘கடலும் உயிரும்’ கட்டுரை அருமையான பதிவு. கடலும் கரையும் மீனவர்களின் வாழ்வியலோடு உயிராகக் கலந்திருப்பது எவ்வாறு என்று கட்டுரை விளக்குகிறது. மண்ணையும் மனிதனையும் தொழிலையும் கடலையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்ப்பவர்களைச் சிந்திக்க வைக்கிறது. ‘பாலஸ்தீனத்திலும் சரி, ஈழத்திலும் சரி, தங்கள் நிலத்தை விட்டுவிட்டு, மாற்று நிலத்தில் வாழ்ந்தால் என்ன? அதற்கு இத்தனை போராட்டமா? என்று கேட்பவர்களுக்கான பதில் இந்த தனுஷ்கோடி தாத்தாவின் உணர்வு மிகுந்த வரிகள். நீரோடும் கரையோடும் கரைந்துள்ள மீனவர்களின் வாழ்வைத் தொடர்ச்சியாக பதிவதற்கு நன்றி.
- வெண்ணிலா, சென்னை.