

காமராஜர் பிறந்தநாளை இரண்டு கட்டுரைகள் வெளியிட்டதன் மூலம் நினைவுகூர்ந்த ‘தி இந்து’ தமிழ் ஏட்டுக்கு எனது நன்றி. தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குக் காரணம் தந்தை பெரியார், காரியம் காமராஜர் என்று கல்கி வார இதழ் ஒரு முறை எழுதியது. கட்டுரையாளர் கோபண்ணா எப்போதும் சரியான வரலாற்றுக் குறிப்புகளைத் தருபவர். இந்தக் கட்டுரையில் பேரறிஞர் அண்ணாவின் பணியைக் குறிப்பிட்டது மிகவும் பாராட்டுக்குரியது. அதேபோல, நீதிராஜனின் கட்டுரையும் அருமை. உள்ளதை உள்ளபடி எழுதிய பெரு மக்களைப் பாராட்டுவதுடன் அதற்குக் களம் அமைத்துக்கொடுத்த இந்து தமிழ் ஏட்டுக்கும் நன்றி!
- தி. என்னாரெசு பிராட்லா, காரைக்குடி.