

'சிவாஜிகணேசன் கம்பீரத்தின் கடைசி அவதாரம்' என்கிற கட்டுரை கலையுலக அகராதிக்கு நல்லதொரு நினைவாஞ்சலி. மிகை நடிப்பு என்பது அர்த்தம் புரியாத ஒன்று. உறவுகளின் உன்னதத்தை உருகி உருகி உணர்த்திய அவரின் நடிப்பு எப்படி மிகையாக முடியும்? உறவுகளின் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனிதர்களின் பிம்பமாகவே அவர் திகழ்ந்தார்.
திருவருட்செல்வர் நாவுக்கரசரை இப்போது நினைத்தாலும்… இப்போதும் என் போன்றவர்களுக்கு அண்ணனாக, தந்தையாக, தாய் மாமனாக, தாத்தாவாக, நல்லதொரு நண்பனாக, வாழ்வின் கலங்கரை விளக்கமாகவே திகழ்கிறார். சிவாஜி, கம்பீரத்தின் கடைசி அவதாரம் மட்டுமல்ல; உறவுகளின் உணர்வுகளுக்கும், தமிழின் உச்சரிப்புக்கும், தமிழ் மரபின் மாண்புகளுக்கும்தான்.
- சீ.குமார், சிக்கல்.