

புலிகளைப் பற்றிப் பல அரிய கருத்துகளை வெளியிட்டதன் மூலம் புலிகள் மீது பரிதாப உணர்ச்சியை விதைத்துள்ளீர்கள். புலியின் நகம், பல், எலும்புகள் என அதன் உடல் உறுப்புகளுக்காக வேட்டையாடியதன் விளைவாக அழிவின் விளிம்பில் நிறுத்தப்பட்டு விட்டது அந்தப் பேருயிர்.
புலிகளுக்குக் காப்பகங்கள் அமைப்பது சரிதான். அதே நேரத்தில் ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்து, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றில் உள்ள தரிசு நிலங்களில் மரக்கன்றுகளை நட்டுக் காடுகளை வளர்ப்பதைச் சட்டமாகவும் சமுதாயக் கடமையாகவும் செய்ய வேண்டும்.
- கி. நாவுக்கரசன், இராணிப்பேட்டை.