

எந்த மனிதனையும் அவன் உடுத்தும் உடைகளை வைத்து வேறுபடுத்திப் பார்ப்பது மனிதகுல விரோத சிந்தனையாகும். காமராஜர் போன்ற தலைவர்கள் வெளிநாடுகளுக்குக் கூட வேட்டி அணிந்தே சென்றனர். ஆனால், இங்கோ வேட்டிக்குத் தடை விதிக்கப்படுகிறது. “உடை மற்றும் நடைமுறைகளில் இந்தியராக இருந் தாலும், உணர்வுகளில் அவர்கள் ஆங்கிலயேராக இருக்க வேண்டும்’’ என்று மெக்காலே பிரபு சொன்னதாகச் சொல்வார்கள். ஆனால், அந்த மெக்காலே பிரபுவையே விஞ்சும் வகை யில் சிலர் செயல்படுவதை எங்கு சென்று முறையிடுவது?
- கே.எஸ். முகமத் ஷூஐப், காயல்பட்டினம்.