

ஜூலை 17-ம் தேதி ‘போரின் இரு முகங்கள்’ என்ற தலைப்பில் ‘தி இந்து’ நாளிதழில் வெளியான இரண்டு புகைப்படங்களும் இஸ்ரேலியர் களின் கொடூர மனப்போக்கையே வெளிப்படுத்து கின்றன. இரண்டாம் உலகப் போரின்போது கொடூரமான சித்திரவதைக்கு ஆளான ஓர் இனமா, அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப் படுவதை இப்படி ஏதோ ஒரு கால்பந்து விளையாட்டைக் காண வருவதுபோலக் கும்பலாக வந்தமர்ந்து வேடிக்கை பார்த்து ரசிப்பது! ஹிட்லருக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?
- ந. சாம்பசிவம், சென்னை.