

இத்தனை காலமாக அரசு உதவி, வங்கி உதவி போன்றவற்றின் துணை இல்லாமல் கந்து வட்டி வாங்கி அல்லல்களுக்கு இடையே சிறு தொழில் முனைவோர் தங்கள் தொழிலை நடத்திவருவது பற்றிய குருமூர்த்தியின் கட்டுரை ஆச்சரியப்பட வைத்தது. ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். எல்லாம் வேலை தேடுபவர்களாகவும், சிறு தொழில் செய்வோர் வேலை வழங்குபவர்களாகவும், இவர்கள்தான் உண்மையான சமூக நீதியாளர்கள் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார் கட்டுரையாளர். இந்த எளிய கணக்கை அரசு பின்பற்றி நாடு முன்னேற வழிவகுக்க வேண்டும்.
- எஸ். எஸ். ரவிக்குமார், கிருஷ்ணகிரி.