

தாயும் குழந்தையும் தழுவிக் கொண்டதைப் போல முதியவரும் கடல் அலையும் தழுவிக் கிடந்ததை சத்தியமாகப் பார்த்தேன் என்று ‘கடலும் உயிரும்’ கட்டுரையில் கட்டுரையாளர் கூறியிருந்ததைப் படித்தபோது, அந்தக் காட்சியை உணர முடிந்தது.
அரை மணி நேர மின் வெட்டையே சகித்துக்கொண்டு வாழப் பழகாத நம் போன்றோருக்கு, ஆண்டாண்டு காலமாக தனுஷ்கோடி கடலோடிகள் படும் பாடுகள், மரணத்தைவிடக் கொடுமையாகத் தெரிகிறது.
இப்படி ஓர் இனம் நம் நாட்டில் இருப்பதையே நமக்கு தெரியப்படுத்தாத நம் வரலாற்றுப் புத்தகங்களும், கட்சி வேறுபாடின்றி அவர்களுக்கு இழைக்கப் பட்டிருக்கும் துரோகமும் அநீதியின் உச்சம்.
- எஸ்.எஸ். ரவிக்குமார், கிருஷ்ணகிரி.