

'கொள்ளை லாபமா… மிதமான லாபமா?' தலையங்கம் நாட்டுமக்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதாக உள்ளது. மருந்து உற்பத்தித் துறையைக் கட்டுப்பாடின்றி பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்துவிட்டதன் விளைவுதான் இந்தப் பகல்கொள்ளை.
பகல்கொள்ளையைத் தடுக்க மருந்து விலை நிர்ணய ஆணையம் அமைக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் மேலை நாடுகளை உவமை காட்டும் நம் அரசியல்வாதிகள் மேலை நாடுகளில் மருத்துவம் சார்ந்த துறைகள் அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன என்பதை மறந்தது ஏன்?
- ஜே. ராஜகோபாலன், நெய்வேலி.