

ஞாயிறு அன்று நடுப்பக்கங்களைப் பார்த்தவுடன் அதிசயமாக இருந்தது. பிறகுதான் புரிந்தது ஜெ-25 என்ற தலைப்பில் முதலமைச்சர் சட்டமன்றத்துக்குள் நுழைந்து 25 ஆண்டுகள் ஆனதற்கான ஒரு பார்வைதான் இந்தத் தொகுப்பு என்று. அவரின் அரசியல் அணுகுமுறைகளையும் அவரது நடவடிக்கைகளையும் எதிர்ப்பவர்கள்கூட, அவரது இந்த முன்னேற்றம் வியக்க வைக்கும்.
‘வைடு ஆங்கிள்' ரவிசங்கரின் இந்த புகைப்படத் தொகுப்பில் சில படங்கள் நாங்கள் இதுவரை பார்த்திராதவை. மிகமிக நல்ல புகைப்படத் தொகுப்பு.
- வீ. சக்திவேல், தே.கல்லுப்பட்டி.