

‘பகல் வீடு’ பற்றிய கட்டுரை படித்தேன். இன்றைய காலகட்டத்தில், இலவசமாகவே முதியோருக்குச் சேவை செய்துவரும் ஜெபசுரேஷ் மற்றும் ஜெபி விக்டோரியா இருவருமே பாராட்டுக்கு உரியவர்கள்.
முதியோருக்கு அன்பும் அரவணைப்பும்தான் எஞ்சிய காலத்தின் தேவை. அவை எங்கு கிடைக்கப்பெறினும், சந்தோஷமாக ஏற்றுக்கொள்வார்கள் என்பதைக் கட்டுரை வரிகள் தெளிவாக்கின. ‘பகல் வீட்டின்’ சேவை தொடரட்டும்.
- பி. நடராஜன், மேட்டூர்அணை.