

பெண் இன்று இணைப்பில் பேராசிரியர் அ. ராமசாமி எழுதிய 'பெண்ணாக உணரும் தருணம் எது?' கட்டுரை படித்தேன். பெண் சாதாரணமாக சைக்கிள் ஓட்டக்கூட இந்த சமூகம் அனுமதிக்காததற்குக் காரணம், ஆணாதிக்க மனநிலையே என்பதைக் கட்டுரை அழகாகச் சொன்னது. விளையாட்டுப் பொருளிலிருந்து அணியும் ஆடை, பயன்படுத்தும் வாகனம் ஏன், நடக்கும் நடையில்கூட ஆண்-பெண் பாகுபாடு உள்ளதைக் காணும் வாய்ப்பு நமக்கு அதிகம் உள்ளது. அடக்கி வைக்கும் எந்தச் சமூகமும் ஒரு நாள் வெடித்தெழும் என்பதற்கு இன்றுள்ள பெண்களின் செயல்பாடே காரணம். சைக்கிள் ஓட்டுவதைக்கூடக் குறையாகக் கண்ட சமூகம், இன்று ஆகாய விமானம் வரை அத்தனை வாகனங்களையும் ஓட்டுவதைக் கண்டு அதிசயித்து நிற்கிறது. பல பெண் எழுத்தாளர்கள் சமூகத்தையே திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு எழுத்தால் சாதிக்கும் வேளையில், பெண்கள் என்ன எழுதிக் கிழித்துவிட்டார்கள் எனக் கேள்வி எழுப்புவது சிறுபிள்ளைத்தனமானது. இதை அம்பையின் எழுத்தைக் கொண்டு கட்டுரையாளர் நிரூபித்துள்ளது சிறப்பு.
- ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.