

கே.கே. மகேஷ் எழுதிய ‘துயரத்தின் 50 ஆண்டுகள்’ கட்டுரையைப் படித்தபோது நான் மாணவனாக இருந்தபோது நடந்த அந்த துயரச் சம்பவம் நினைவுக்கு வந்தது. வேகமாகச் செல்லும் ரயிலின் அதிர்வுகளைக் கூட தாங்க இயலாத அளவுக்குச் செங்கற்களை அடுக்கிவைத்து சிமென்டைப் பூசி ஒரு வலிமையற்ற பள்ளிக் கட்டிடத்தைக் கட்டியிருந்தார்கள் என்று செய்திகள் வந்தன. சமீபத்தில் பள்ளி வாகனத்தில் ரயில் மோதிப் பள்ளிக் குழந்தைகள் மரணம் என்ற செய்தியும் அதிர்ச்சி தந்தது. பெரியவர்களின் அநியாயமான செயல்பாடுகளால் சின்னஞ்சிறு குழந்தைகளை நாம் இழந்து நிற்கிறோம்.
- கே.பி.எச். முகம்மது முஸ்தபா, திருநெல்வேலி.