

உலகம் முழுவதும் அழியும் உயிரினங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள உயிரினங்களின் எண்ணிக்கை ஆயிரக் கணக்கில் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியாவில்தான் உயிரினங்கள் வெகுவேகமாக அழிந்துவருவதாக இயற்கைப் பராமரிப்புக்கான ஒன்றியம் கவலை தெரிவிக்கிறது. இத்தகைய சூழலில், ‘மாயாபஜார்' பகுதியில் குட்டிப் புலியின் வாயிலாக உயிரினங்கள் அழிந்துவருவதை மாணவர் தலைமுறைக்குப் புரியும்படி சொன்ன ‘தி இந்து'வின் பணி பாராட்டுக்குரியது.
- முருகவேலன், கோபிசெட்டிப்பாளையம்.