

இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவச் சிந்தனைகளை நுண்மாண் நுழைபுலத்தோடு வெளியிடும் ‘ஆனந்த ஜோதி’ இணைப்புக்கு நன்றி. கிறிஸ்துவின் மலைப் பிரசங்கத்தின் சாரத்தை எளிமையாகப் புரிந்துகொள்ளும்படி அனிதா அசிசி எழுதியிருந்தார்.
சஞ்சய் காந்தியை விமான விபத்திலே பறிகொடுத்தபோது, இந்திரா காந்தி தொடர்ந்து இயேசுவின் மலைப் பிரசங்கத்தையும், யோவான் 14-ம் அதிகாரத்தையும் வாசித்தபடி இருந்தார் என்பது நம்மில் பலர் அறியாத செய்தி.
- முருகவேலன், கோபிசெட்டிபாளையம்.