

ஹைதராபாத்தில் பெண் டிடிஇ ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவம் படித்தேன். வட இந்தியாவில் ஓடும் பெரும்பாலான ரயில்களில் இதே நிலைமைதான். நாங்கள் ஒருமுறை டெல்லி சென்றபோது முன்பதிவுப் பெட்டிகளில் நிறைய பேர் பயணம் செய்தனர்.
இதுபற்றி டிடிஇ-யிடம் முறையிட்டபோது அவர், “நீங்கள் ஒரு நாள் பயணம் செய்துவிட்டுப் போய்விடுவீர்கள். ஆனால், நாங்கள் தினம்தினம் இவர்களுடன் பயணம் செய்ய வேண்டும்.
இவர்களை எதிர்த்து எங்களால் எதுவும் செய்ய முடியாது’’ என்றார். உயர் வகுப்புகளில் மட்டும் இந்தத் தொல்லை இல்லை. அரசு கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதனைத் தடுக்க முடியும்.
- கே. சிராஜுதீன், முசிறி.