

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரைகள் இரண்டும் மிக அருமை. கல்வி நிகழ்ச்சி களில் கடவுள் வாழ்த்துக்குப் பதிலாக காமராஜர் வாழ்த்துப் பாடலாம் என்ற பெரியாரின் வார்த்தைகள் முற்றிலும் உண்மை. இன்னும் 10 ஆண்டு களுக்கு காமராஜரை விட்டுவிடாமல் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அவர் சொன்னதைக் கேட்காமல் போன தாலேயே, இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக வந்திருக்க வேண்டிய தமிழகம், தனது பொன்னான வாய்ப்பை இழந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
- ஜத்துஜஸ்ரா, கொடைக்கானல்.