

ஜூலை 13-ல் வெளிவந்த ‘பெண் இன்று' நான்கு பக்கமும் அருமை. விவாதக் களத்தில் வாசகர்களின் கருத்தும் ரசிக்க வைத்தது. பெண் என்பவள் உணர்ச்சியும் ரத்தமும் உள்ள ஜீவன் எனப் புரிந்துகொண்டாலே போதும் என்பதுதான் அனைத்துப் பெண்களின் ஆதங்கம். ‘பெண்ணாக உணரும் தருணம் எது?' என்ற கட்டுரையைப் படித்தபோது, சிறு வயதில் என் அப்பாவுக்குத் தெரியாமல் சைக்கிள் கற்றுக்கொண்டது மலரும் நினைவாக வந்தது.
- உஷாமுத்துராமன், திருநகர்.