

‘கும்பகோணம்-கொலைத்தீ' கட்டுரை இரக்கமற்ற படுபாவிகளின் பாதகச் செயல்களால் பிஞ்சு மலர்கள் தீக்கிரையான சம்பவத்தை நினைவூட்டியது. சமீபத்தில் 11 மாடிக் கட்டிடம் இடிந்து கொத்துக்கொத்தாக மக்கள் மடிந்தது உட்பட இப்படியான சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. நடவடிக்கை எடுக்க வேண்டிய கல்வித் துறை, காவல்துறை, நீதித்துறை ஆகியவற்றின் மெத்தனம், தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி என்பதையே உணர்த்துகிறது.
- அ. பட்டவராயன், திருச்செந்தூர்.