

'சிவாஜி கணேசன்: கம்பீரத்தின் கடைசி அவதாரம்' என்ற அவருடைய நினைவு நாளையொட்டிய கட்டுரை படித்தேன். யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்ற முதுமொழிக்குச் சரியான உதாரணமாக இருப்பவர். இல்லையென்றால், அவருடைய மரணத்துக்குப் பின் 13 ஆண்டுகள் ஆனபின்பும் அவரை நினைவுபடுத்திக் கொண்டாடியிருப்போமா?
யானையின் கம்பீரத்தைத்தான் அவருடைய நடிப்பில் நாம் கண்டது. 'பராசக்தி'யிலிருந்து 'தேவர் மகன்'வரை அவர் ஏற்காத பாத்திரங்களா?
'பாசமல'ரில் நடிகையர் திலகத்துடன் ஆகட்டும், 'தில்லானா மோகனாம்பா'ளில் நாட்டியப் பேரோளியுடன் ஆகட்டும், இன்னும் எத்தனையோ நடிகைகளுடன் நடித்தபோதும், அவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு நடித்த அந்த மாமேதையை அவர் நினைவு நாளில் நினைவுபடுத்திப் பாராட்டியமைக்கு உங்களையும் பாராட்ட வேண்டும். எந்த நல்ல நடிகரும் மக்களின் நினைவிலிருந்து அவ்வளவு எளிதில் மறைந்து விட முடியாது.
- ஜீவன்.பி.கே., கும்பகோணம்.