

டெல்லியில் பத்தாம் வகுப்பு மாணவி துப்பாக்கி முனையில் பலாத்காரம் குறித்த செய்தி, படிக்கும்போதே உடலைப் பதற வைக்கிறது. சமீப காலமாக, பெண்கள் தனியாக வெளியில் வர, தலைநகரிலேயே தகுந்த பாதுகாப்பு இல்லை என்பது வேதனை.
பாலியல் குற்றங்களை முறைப்படி விசாரித்து, தண்டனை கொடுக்க ஆகும் கால தாமதமே இதுபோன்ற குற்றங்கள் அதிகரிக்க முக்கிய காரணம். குற்றவாளிகளுக்கு உடனே தண்டனை கிடைக்க வழிவகை செய்யும் சட்டத் திருத்தங்களை, அரசு கொண்டுவந்து நடைமுறைப்படுத்தினால் மட்டுமே, இந்தக் கொடூர குற்றங்கள் குறைய வாய்ப்பு உண்டாகும்.
-பி. நடராஜன், மேட்டூர்அணை.