துணிவு வராது

துணிவு வராது
Updated on
1 min read

அறியாமல் செய்கிற குற்றங்களைச் சிறார் செய்தால், அவர்களின் வயதைக் கணக்கிலெடுத்து, 18 வயதுக்குள்ளிருந்தால் தண்டனையைக் குறைக்கலாம் என்பது வேண்டுமானால் சரியானதாக இருக்கலாம்.

இளம் குற்றவாளி நன்கு தெரிந்தே தவறு, அதுவும் மிகப் பெரிய தவறுசெய்து, ஒருவர் கொலையாவதற்கும் அவனே காரணம் எனும்போது அவன் வயதைக் கணக்கிலெடுக்க வேண்டியதில்லை. சம்பந்தப்பட்ட பெண்ணே அவனை எரித்துக்கொல்ல வேண்டும் என்று சாகும் தறுவாயில் சொல்வதென்றால், அவன் எவ்வளவு மூர்க்கனாயிருந்திருக்க வேண்டும்.

இதைப் போன்றவர்களுக்கெல்லாம் கருணை காட்ட வேண்டியதில்லை. அப்போதுதான் மற்ற இளம் சிறார்களுக்கும் இதுபோன்ற பெருந்தவறுகளைச் செய்யும் துணிவு வராது. குற்றத்தின் அளவுக்கு ஏற்றவாறு தண்டனையும் கடுமையாக இருக்க வேண்டும் என்கிற கட்டுரையின் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதே.

- கே.என். இராமகிருஷ்ணன், சென்னை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in