

நோக்கியா போன்ற நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் உடல்நலன் பற்றியும் விவாதிப்பது அவசியம்.
‘கைபேசி போன்ற மின்னணுக் கருவிகள் தயாரிக்க ஏராளமான நச்சு உலோகங் கள் பயன்படுத்தப்படுகின்றன. காரீயம், காட்மியம், குளோரின் போன்றவற்றைச் சூடாக்கும்போது அவை நச்சு வாயுக்களை வெளியிடுகின்றன’ என எச்சரிக்கிறது கிரீன் பீஸ் அமைப்பு.
பின்லாந்து நிறுவனமான நோக்கியா, சென்னையில் ஒரு தொழிலாளிக்குக் கொடுக்கும் ஊதியத்தைப் போல 45 மடங்கு அதிகமான தொகையைத் தனது நாட்டின் தொழிலாளிக்கு ஊதிய மாகக் கொடுக்கிறது. இவற்றையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
- முருகவேலன், கோபிசெட்டிபாளையம்.