

நீர்… நிலம்… வனம்! தொடர் தொடங்கியது முதல், வீட்டில் மாலையில் இன்னொரு வேலை சேர்ந்திருக்கிறது. நான் படிப்பதோடு அல்லாமல், குழந்தைகளைப் பக்கத்தில் வைத்துச் சொல்லிக்கொடுப்பது. ஒரே வாரத்தில் குழந்தைகளின் வாசிப்பில் அவ்வளவு பெரிய மாற்றம்! காலையில் ‘தி இந்து’ வந்தவுடன் யார் முதலில் படிப்பது எனப் போட்டி. நேற்று முன்தினம் முதல் “அம்மா நாங்கள் காலையிலேயே படித்துவிட்டோம்... கேள்வி கேள்” என்று மகிழ்ச்சியுடன் செய்தித்தாளை நீட்டுகின்றனர் குழந்தைகள். ஒரு பள்ளிக்கூடம் செய்ய வேண்டியதைத் தினமும் செய்கின்றன ‘தி இந்து’வின் நடுப்பக்கங்கள். கடல் உலகைப் படிக்கப் படிக்க எத்தனை சுவாரசியம், எத்தனை புதிய புதிய செய்திகள்! நடுப்பக்கங்களை நறுக்கிப் பத்திரப்படுத்துகிறோம், பாடப் புத்தகங்களைப் போல.
- வெ. சாந்தி, உறையூர், திருச்சி.