போதை ஏற்படுத்தும் பேரழிவுகளுக்கு முடிவு எப்போது?

போதை ஏற்படுத்தும் பேரழிவுகளுக்கு முடிவு எப்போது?

Published on

திருச்சியை அடுத்த அதவத்தூரில் உள்ள தனியார் மது அடிமைகள் மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகுமார் என்பவர், அங்கிருந்த ஊழியர்களால் அடித்துக் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்கும் வழிமுறைகள் ஏன் முறையாகக் கண்காணிக்கப்படுவதில்லை என்னும் கேள்வியும் எழுகிறது.

சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மலைச் சேர்ந்த விஜயகுமார், பல ஆண்டுகளாகக் குடிக்கு அடிமையாகி இருந்ததால் அவருடைய மனைவி பிரிந்து சென்றுவிட்டார். விஜயகுமார் தீவிரக் குடிநோயாளி ஆனதைத் தொடர்ந்து உறவினர்கள் அவரைக் கடந்த ஜனவரி 8 அன்று அதவத்தூரில் உள்ள தனியார் மது அடிமைகள் மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர்.

இரண்டே நாள்களில், விஜயகுமார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக அவரது உறவினருக்குத் தகவல் சொல்லப்பட்டது. மருத்துவமனையில் விஜயகுமார் இறந்துவிட, அவர் கம்பாலும் குழாயாலும் தாக்கப்பட்டது உடற்கூறாய்வில் தெரியவந்திருக்கிறது.

குடிநோயாளிகளின் மறுவாழ்வுக்காகத் தமிழக அரசு சார்பில் ஏழு மையங்களும் நூற்றுக்கணக்கான தனியார் மையங்களும் செயல்பட்டுவருகின்றன. சென்னையில் மட்டும் 135க்கும் மேற்பட்ட தனியார் மையங்கள் உள்ளன. அரசு அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக நடத்தப்படும் மையங்களும் உண்டு.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in