பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு 10 ஆண்டுகளான போதிலும் உலக அளவில் காலநிலை மாற்றத்துக்கு எதிரான இலக்கை அடைவதில், உலக நாடுகள் போதுமான அளவில் செயலாற்றவில்லை என்று ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டில் இந்தியா எழுப்பியிருக்கும் குரல், இன்றைய சூழலுக்கு மிக முக்கியமானது.
கரியமில வாயு முதலான பசுங்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தால் புவி வெப்பமடைந்துவரும் ஆபத்து 30 ஆண்டுகளுக்கு முன்பே உணரப்பட்டுவிட்டது. இதனால் கடந்த 1995 முதல் ஐ.நா. காலநிலை மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் 2015இல் பாரிஸ் நகரில் நிறைவேற்றப்பட்ட காலநிலை மாற்றக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் முக்கியத் திருப்பமாக அமைந்தது.