நூல் கொள்முதல் முறைகேடு: வேண்டும் வெளிப்படைத்தன்மை

நூல் கொள்முதல் முறைகேடு: வேண்டும் வெளிப்படைத்தன்மை
Updated on: 
2 min read

கோவை ‘பெரியார் அறிவுலக’த்தில் வைப்பதற்காகக் கொள்முதல் செய்யப்பட்ட சில பதிப்பகங்களின் நூல்கள் போலியானவை என்றும் அதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும் வெளியாகிவரும் தகவல்கள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன.

முந்தைய திமுக ஆட்சியில் 2024 நவம்பரில் கோவை காந்திபுரத்தில் 1.98 லட்சம் சதுர அடி பரப்பில் ‘பெரியார் அறிவுலகம்’ அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இதன் கட்டுமானப் பணிகளுக்கு ரூ.245 கோடி; நூல்கள், மின்னணு நூல்கள் வாங்குவதற்கு ரூ.50 கோடி, இதர வசதிகளுக்கு ரூ.5 கோடி என ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டது. பெரியார் அறிவுலகப் பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த அக்டோபர் 16 அன்று முதல்வர் விஜய் அதைத் திறந்துவைத்தார்.

இந்தச் சூழலில் அறிவுலகத்தில் இடம்பெற்றுள்ள ‘அகல் விளக்கு’, ‘பீனிக்ஸ்’ பதிப்பகங்களின் நூல்கள் தொடர்பாக எழுத்தாளர் பெருமாள் முருகன் முன்வைத்த குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தின.

Loading content, please wait...

X