

ஏற்றுமதிப் பொருட்களுக்கான வரியைக் குறைப்பது தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையே ஏற்பட்டிருக்கும் ஒப்பந்தம் ஒருபுறம் நம்பிக்கை அளிக்கும் வகையிலும், மறுபுறம் புதிய கேள்விகளுக்கு வழிவகுக்கும் வகையிலும் அமைந்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
2024 ஆண்டு நிலவரப்படி, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்காவில் 3.3% வரியும், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியாவில் 17% வரியும் விதிக்கப்பட்டிருந்தன.
இதுதொடர்பாக, இந்தியாவைக் கடுமையாக விமர்சித்துவந்த டிரம்ப், 2025இல் பரஸ்பர வரியாக 25 சதவீதத்தை இந்தியப் பொருட்களுக்கு விதித்தார். பின்னர்.
உக்ரைன் மீது போர் நடத்திவரும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்காக 25% அபராத வரி விதித்ததால், இந்தியப் பொருட்களுக்கான வரி 50% ஆக உயர்ந்தது. இதன் காரணமாக, இந்தியாவின் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டன.