காவிரி விவகாரம்: தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்

காவிரி விவகாரம்: தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்
Updated on
2 min read

காவிரி விவகாரத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்துவரும் திருப்பங்கள் தமிழக விவசாயிகளைக் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கின்றன.

காவிரியின் குறுக்கே அணை கட்டக் கீழ்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் தேவை என உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் எந்தக் குறிப்பும் இல்லை என மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் ராஜ் பூஷண் செளத்ரி தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து விவாதங்கள் சூடுபிடித்திருக்கின்றன.

மேகேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்கச் சில நிபந்தனைகளின் அடிப்படையில் மத்திய நீர்வள ஆணையம் கர்நாடகத்துக்கு 2018இல் அனுமதி அளித்தது.

திட்ட அறிக்கையை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை 2025 நவம்பரில் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன் தொடர்ச்சியாக மேகேதாட்டில் ரூ.9,000 கோடி மதிப்பீட்டில் அணை கட்ட கர்நாடகம் திட்டமிட்டு வருகிறது.

இந்தச் சூழலில் தமிழக மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்றத்தில், மேகேதாட்டு திட்டம் தொடர்பாக எழுப்பியிருந்த கேள்விகளுக்கு மத்திய இணை அமைச்சர் மேற்சொன்ன பதில்தான் பேசுபொருள் ஆகியிருக்கிறது.

காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பில் கீழ்ப்படுகை மாநிலங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நீர் வழங்கலைப் பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் மேல்படுகை மாநிலம் மேற்கொள்ளக் கூடாது என்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in