

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான (பிஜி-டிஆர்பி) தமிழ்த் தகுதித் தேர்வில் 85 ஆயிரம் பேர் தோல்வியடைந்திருப்பது பல்வேறு கேள்விகளுக்கு வழிவகுத்திருக்கிறது. தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 1,996 முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த அக்டோபர் 12 அன்று தேர்வு நடத்தியது.
கணிதம், இயற்பியல், வேதியியல், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 12 பாடப் பிரிவுகளுக்கான 1,837 பணியிடங்களுக்கும், கணினிப் பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர் ஆகிய பதவிகளுக்கான 159 பணியிடங்களுக்கும் உரிய ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வு இது.