

அடிப்படை ஆதாரம் இல்லாமல் தனியார் நிறுவனத் தயாரிப்புகள் குறித்து அவதூறு பரப்புவது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என சென்னை உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு, இன்றைய சூழலில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துவோர் எந்தவொரு வரைமுறையும் இன்றிச் செயல்பட்டுவரும் இந்நாள்களில் உயர் நீதிமன்றத்தின் இந்த நிலைப்பாடு வரவேற்கத்தக்கது.
தேனியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரிக்கும் தண்ணீர் சுத்திகரிப்புக் கருவிகள் தொடர்பாகச் சில தகவல்கள் ஒரு யூடியூப் அலைவரிசையில் கடந்த மே மாதம் வெளியிடப்பட்டன. சென்னையைச் சேர்ந்த இருவர் இந்த யூடியூப் அலைவரிசையை நடத்திவருகிறார்கள்.