எரிபொருள் விலை உயர்வு: நிலவரம் மோசமாகிவிடக் கூடாது!

எரிபொருள் விலை உயர்வு: நிலவரம் மோசமாகிவிடக் கூடாது!
Updated on
2 min read

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்குத் தலா ரூ.3 உயர்த்தப்பட்டிருக்கிறது. மேற்காசியப் போரின் விளைவால் நாட்டில் எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த விலை உயர்வைக் கருத வேண்டியிருக்கிறது.

எனினும், இதன் சங்கிலித் தொடர் விளைவாக அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி அதிகரிக்கும் என்னும் கவலையும் எழுந்திருக்கிறது. மேற்காசியாவில் போர் தொடங்கியது முதலே இந்தியாவில் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயருமா என்கிற கேள்வி எழுந்தவண்ணம் இருந்தது.

தற்போது பெட்ரோல், டீசல் விலை தலா ரூ.3 உயர்த்தப்பட்டிருப்பது, எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் சுமையைக் குறைக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள ஒரு நடவடிக்கை.

தவிர்க்க இயலாத இக்கட்டான நிலையில் இம்முடிவை அரசு எடுத்திருப்பதை உணர முடிகிறது. பெட்ரோலியப் பொருள்களின் விலை 4 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் உயர்த்தப்பட்டிருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in