திருவிழா யானைகள்: விதிமீறல்கள் கூடாது

திருவிழா யானைகள்: விதிமீறல்கள் கூடாது
Updated on: 
2 min read

அண்மையில், கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற தசரா கொண்டாட்டத்தின்போது ஒரு யானை திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது; உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றாலும், சில வாகனங்கள் சேதமடைந்தன.

யானை வழித்தடங்கள் மறிக்கப்படுவதால் ஏற்படும் யானை - மனிதர் எதிர்கொள்ளல் சம்பவங்களைப் போல, திருவிழாக்களில் யானைகளைப் பயன்படுத்துவது குறித்தும் விரிவான விவாதங்களும் உரிய நடவடிக்கைகளும் அவசியமாகின்றன.

கர்நாடகத்தில் தசரா பண்டிகைகளில் யானைகள் பயன்படுத்தப்படுவது வழக்கம்.

வழக்கமாக இந்தப் பணியைச் செய்துவந்த யானையின் காலில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, 36 வயதான வேறொரு யானை அந்தப் பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், விழாக்களில் அந்த யானை பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, 650 கிலோ எடையுள்ள வெள்ளியிலான அம்பாரியைச் சுமந்து சென்றபோது யானை திடீரென மிரட்சியடைந்ததால் இந்தச் சம்பவம் நேர்ந்தது தெரியவந்திருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகிவருகின்றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in