திடக்கழிவு மேலாண்மை: புதிய விதிமுறைகள் நீர்த்துப்போகக் கூடாது!

திடக்கழிவு மேலாண்மை: புதிய விதிமுறைகள் நீர்த்துப்போகக் கூடாது!
Updated on
2 min read

முறையாகக் கையாளப்படாத குப்பை, நாள்பட்ட குப்பைக் கிடங்குகள், எரி உலைகள் போன்றவற்றுக்குக் காரணமாகி, அதன் மூலம் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு வழிவகுக்கின்றன.

திடக்கழிவு மேலாண்மைக்கு எனப் புதிய சட்டம் இந்தியாவில் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், அவை நீர்த்துப்போகாதவண்ணம் உச்ச நீதிமன்றம் வழிகாட்டல்களை வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது.

மத்தியப் பிரதேசத்தின் போபால் மாநகராட்சிக்கு உள்பட்ட ஆதம்பூர் குப்பைக்கிடங்கில் விதிமுறைகளுக்கு முரணாக ஆண்டுக்கணக்கில் குப்பை குவிக்கப்பட்டு வந்தது. 2023இல் தேசியப் பசுமைத் தீர்ப்பாயமானது மாநகராட்சி நிர்வாகத்துக்கு ரூ.1.80 கோடி அபராதம் விதித்தது.

இதை எதிர்த்து அந்நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்த நிலையில், நீதிபதிகள் பங்கஜ் மித்தல், எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் இந்த வழக்கை அண்மையில் விசாரித்தனர்.

திடக்கழிவு மேலாண்மை விதிகள்-2026 வருகிற ஏப்ரல் 1லிருந்து நடைமுறைக்கு வர உள்ள நிலையில், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 2016ஆம் ஆண்டு விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுவதில் உள்ள தீவிரமான பற்றாக்குறைகள் குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்திருக்கின்றனர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in