அண்மையில் தென்காசி மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தின் சுவடுகள் மறையும் முன்னர், இன்னொரு துயரமாக சிவகங்கை மாவட்டத்திலும் ஒரு பெரும் விபத்து நிகழ்ந்திருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. நவம்பர் 24 அன்று தென்காசி அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.
அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். கோவில்பட்டியிலிருந்து தென்காசிக்குச் சென்ற பேருந்தின் மிகை வேகமே விபத்துக்குக் காரணம் என முதல்கட்டத் தகவல்கள் தெரிவித்தன.