போதை மீட்பு மையங்கள்: கண்காணிப்பும் வழிகாட்டலும் அவசியம்

போதை மீட்பு மையங்கள்: கண்காணிப்பும் வழிகாட்டலும் அவசியம்
Updated on
2 min read

சென்​னை​யில் உள்ள தனி​யார் போதை மீட்பு மையத்தில் சேர்க்கப்பட்டவர் சந்​தேகத்​துக்கு இடமான முறையில் உயிர் இழந்திருப்பது வருந்தத்தக்கது. இது போன்ற மையங்களில் சேர்க்கப்படுபவர்கள் சிகிச்சை என்​னும் பெயரில் துன்புறுத்தப்படுவதும் உயிரிழப்பதும் மட்டுமல்லாமல், மறுவாழ்வு நடவடிக்​கைகள் மீதான நம்பிக்கை யைக் கேள்விக்கு உள்​ளாக்கும் என்​ப​தால் இவ்​விவ​காரத்​தில் அரசின் உறு​தி​யான நடவடிக்கை அவசி​யம்.

காஞ்​சிபுரத்​தைச் சேர்ந்த அருண்​கு​மார் (39), செம்​பாக்​கத்​தில் உள்ள தனி​யார் போதை மீட்பு மையத்​தில் அண்​மை​யில் சிகிச்​சைக்​காகச் சேர்க்​கப்​பட்​டார். இங்கு 50க்​கும் மேற்​பட்​டோர் தங்​கி​யுள்​ளனர்.

நான்காவது நாளில் மையத்​திலிருந்து அருண்​கு​மார் தப்​பிக்க முயன்ற​தாக​வும் பணியாளர் உள்​ளிட்ட சிலர் அவரைப் பிடித்துக் கடுமை​யாகத் தாக்​கிய​தாகவும் கூறப்​படு​கிறது.

இதையடுத்​து, அவர் உடல்​நலக்​குறை​வால் உயி​ரிழந்​த​தாக நிர்​வாகி​கள் சேலை​யூர் காவல் நிலை​யத்​தில் தெரிவித்தனர். அவரது குடும்​பத்​தினர் அளித்த புகாரின் அடிப்​படை​யில் மையத்தின் பணி​யாளர் உள்பட ஐந்து பேர் கைது செய்​யப்​பட்டு நீதி​மன்​றக் காவலில் வைக்கப்​பட்​டுள்​ளனர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in