அதிகரிக்கும் ஆண்களின் மரணம்: தமிழகம் சுதாரிக்க வேண்டும்

அதிகரிக்கும் ஆண்களின் மரணம்: தமிழகம் சுதாரிக்க வேண்டும்
Updated on: 
2 min read

தமிழ்நாட்டில் 2025ஆம் ஆண்டில், பெண்களைவிட ஆண்கள் அதிகமாக (1.11 லட்சம்) மரணமடைந்திருப்பதாக வெளியாகியிருக்கும் ஆய்வறிக்கை கவலை அளிக்கிறது. சாலை விபத்துகள், தற்கொலை, மது - புகைப் பழக்கம், வளர்சிதை மாற்ற நோய்கள் உரிய நேரத்தில் கண்டறியப்படாதது போன்றவை இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகின்றன. இத்தகைய மரணங்களைத் தவிர்க்கும் நடவடிக்கைகள் பற்றிச் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

2018 முதல் 2022 வரையிலான குடிமைப் பதிவு முறை (Civil Registration System) தரவுகளின் அடிப்படையிலான பகுப்பாய்வில் இதுதொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் இடையே பெண்களைவிட ஆண்களின் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதைப் பொதுச் சுகாதாரத் துறையின் மருத்துவ இதழில் வெளியாகியிருக்கும் தகவல் சுட்டிக்காட்டுகிறது. மரணமடைந்தவர்களில் பலர் 15 முதல் 64 வயதுக்கு உள்பட்டவர்கள் என்பது கவனத்துக்குரிய விஷயம்.

2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 2,91,347 பெண்கள் மரணமடைந்தனர்; 4,01,860 ஆண்கள் இறந்துள்ளனர். அதாவது, பெண்களைவிட 1,10,513 அதிகமான ஆண்கள் மரணமடைந்திருக்கின்றனர். இவர்களில் 86% பேர் 15 முதல் 64 வயதுக்கு உள்பட்டவர்கள். வேலை செய்தல், குழந்தை வளர்ப்பு, பெற்றோரைப் பராமரித்தல் போன்ற பொறுப்புகளை மேற்கொள்ளும் முக்கியக் காலக்கட்டத்தில் மரணமடைவது இவர்களின் குடும்பங்களுக்குப் பல்வேறு வகையில் இழப்புகளை ஏற்படுத்துகிறது. ஆண் / பெண் மரணங்களின் எண்ணிக்கைக்கு இடையிலான இடைவெளி கடந்த சில ஆண்டுகளாகவே அதிகமாக இருப்பதும் தெரியவந்திருக்கிறது. 2023இல் இந்த இடைவெளி 1.10 லட்சம்; 2024இல் 1.07 லட்சம் எனப் பதிவாகியிருக்கிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in