மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்படட்டும்

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்படட்டும்
Updated on: 
2 min read

மக்களவையில் 33% மகளிர் இடஒதுக்கீட்டை 2029ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடைமுறைப்படுத்தும் நோக்கில், புதிய அரசமைப்புத் திருத்த மசோதாவைத் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மிகுந்த நம்பிக்கை அளிக்கும் நகர்வு இது.

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு 1992இல் அமல்படுத்தப்பட்டது. பின்னர் 31 ஆண்டுகள் கழித்து 2023இல்தான் மக்களவை, மாநிலச் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்ற முடிந்தது. மக்கள்தொகை அடிப்படையில் மாநிலவாரியாகத் தொகுதி மறுவரையறை செய்வதன் வழியாக இதை நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது.

நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை தற்போது 543ஆக இருக்கிறது. இதை 850 ஆக அதிகரிக்க, நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரை மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் கூட்டியது. இந்தக் கூட்டத்தில் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள், தொகுதி மறுவரையறை குறித்த விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு, மூன்றில் இரண்டு பங்குப் பெரும்பான்மை அவசியம். அதாவது, 543 உறுப்பினர்களில் 361 பேரின் வாக்குகள் தேவை. ஆனால், 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை நடத்தப்பட்டால் தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதாகச் சர்ச்சை எழுந்தது.

Loading content, please wait...

X