வறுமை ஒழிப்பில் இந்தியாவின் சாதனை தொடரட்டும்!

வறுமை ஒழிப்பில் இந்தியாவின் சாதனை தொடரட்டும்!
Updated on: 
2 min read

வேலைவாய்ப்பு, சமூக நலத்திட்டங்களால் இந்தியாவில் 2011-2023 காலக்கட்டத்தில் 49.8 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டிருப்பதாக உலக வங்கி தெரிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வறுமையை அதிவேகமாகக் குறைத்த நாடுகளுள் இந்தியாவும் ஒன்று என அறிவித்திருப்பதும் மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது.

‘இந்தியாவின் வறுமை, சமவாய்ப்பு அறிக்கை’யை உலக வங்கி, அண்மையில் வெளியிட்டது. இதில் பணம், பணமில்லா வடிவங்கள் இரண்டிலும் வறுமையைக் குறைப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாகக் கூறியுள்ளது.

இந்தியாவில் 2011 முதல் 2023 வரை கீழ் நடுத்தர வருமான வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்ந்த மக்களின் வறுமை நிலை 57.7% இருந்து 16.1%ஆகக் குறைந்துள்ளது. இதன் மூலம் 49.8 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதில் இருந்து, நாளொன்றுக்கு ரூ.350க்கு மேல் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை 41.6% உயர்ந்திருப்பதாகப் புரிந்துகொள்ளலாம். ஆனாலும், 34 கோடிக்கும் அதிகமானோர் கீழ் நடுத்தர வர்க்கத்தினராகவே தொடர்கின்றனர்.

Loading content, please wait...

X