நீர்நிலைகள் பராமரிப்பு பாராட்டத்தக்க நடவடிக்கை

நீர்நிலைகள் பராமரிப்பு பாராட்டத்தக்க நடவடிக்கை
Updated on: 
2 min read

நீர்நிலைகளைத் தன்னார்வலர்கள் தூர்வாருவதற்கு நிர்வாகரீதியில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருந்துவந்த நிலையில், அவர்களுக்கு ஒப்புதல் அளிப்பதை விரைவுபடுத்தவும் எளிமைப்படுத்தவும் பிரத்யேக இணையத்தளத்தைத் தமிழக அரசு தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நீர்நிலைகள் உள்ளன. எனினும் அவற்றில் முறையான பராமரிப்பில் உள்ளவை எத்தனை என்று பட்டியலிட்டால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.

தமிழகத்தில் 20,324 நீர்நிலைகள்தான் பாசனத்துக்காகப் பயன்படுகின்றன என 2023இல் எடுக்கப்பட்ட மத்திய அரசின் நீர்நிலைக் கணக்கெடுப்பு கூறுகிறது. இவை ஆண்டுக்கணக்கில் தூர்வாரப்படாதது முக்கியக் காரணம்.

இதனால் மழைக்காலத்தில் எளிதில் வெள்ளப்பெருக்கு, கோடைக்காலத்தில் நீர்ப் பற்றாக்குறை ஆகிய பிரச்சினைகள் ஏற்பட்டன. நீர்நிலைகளைத் தூர்வார அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் 2019 ஜூனில் விரிவான அறிக்கை கேட்டது.

Loading content, please wait...

X