தொடரட்​டும் பெண்​களின் ‘வெற்​றிப் பயணம்’

தொடரட்​டும் பெண்​களின் ‘வெற்​றிப் பயணம்’
Updated on
2 min read

மாநகரங்களிலும் நகரங்களிலும் குளிர்சாதனப் பேருந்து தவிர அனைத்து வகையான பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றிப் பயணம் செய்யும் வகையில் பெண்களுக்கான கட்டணமில்லாப் பேருந்துத் திட்டத்தைத் தமிழக அரசு விரிவுபடுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது.

பணிபுரியும் பெண்களுக்கு மட்டுமல்லாமல் கிராமப்புறப் பெண்களுக்கும் இது உதவியாக இருக்கும். பெண்களின் பொதுவெளிப் புழக்கத்தை அதிகரிக்கவும் பணிக்குச் செல்லும் பெண்களின் பேருந்துக் கட்டணச் சுமையைக் குறைக்கும் நோக்கத்துடனும் கடந்த திமுக ஆட்சியில், ‘மகளிர் விடியல் பயணம் திட்டம்’ 2021இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் சாதாரணக் கட்டணப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றிப் பயணம் செய்தனர். இந்தத் திட்டத்துக்கு வருமான வரம்போ வேறு கட்டுப்பாடுகளோ இல்லாததால் அனைத்துத் தரப்பினரும் இதில் பயனடைந்தனர். 2026 மார்ச் 1 நிலவரப்படி 897.82 கோடி பயணங்களைப் பெண்கள் மேற்கொண்டுள்ளனர்.

அரசுப் பேருந்துகளைப் பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை 40 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக உயர்ந்தது. பேருந்துக் கட்டணம் இல்லாததால் பெண்களால் மாதந்தோறும் ரூ.800 முதல் ரூ.1,500 வரை சேமிக்க முடிவதாகத் தமிழ்நாடு திட்டக் குழுவின் ஆய்வு தெரிவித்துள்ளது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in